ரூ. 80 பெறுமதியான குடிநீர் போத்தலை ரூ. 100க்கு விற்பனை செய்த நிறுவனத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்தமை தொடர்பில், ஹங்வெல்ல, களுஅக்கல பகுதியில் அமைந்துள்ள Leisure World Water Parks (Pvt) Ltd நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் தொடரப்பட்ட வழக்கில், பிரதிவாதி நிறுவனம் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரூ. 500,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் 2026 ஆகஸ்ட் 11 அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, உள்நாட்டில் போத்தலிடப்பட்ட 500 மில்லிலீட்டர் குடிநீர் போத்தல் ஒன்றை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 80/- ஐ மீறி ரூ. 100/-க்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், 2026 ஜூன் 10 ஆம் திகதிய 2492/29 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 96 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம், உள்நாட்டில் போத்தலிடப்பட்ட 500 மில்லிலீட்டர் முதல் 999 மில்லிலீட்டர் வரையான PET குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 80/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ. 20/- அதிகமாக அறவிட்டு குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

⚖️ 2026 ஒக்டோபர் 09 அன்று குறித்த வழக்கு அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கௌரவ நீதிமன்றத்தினால் ரூ. 500,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

📢 நுகர்வோரின் விசேட கவனத்திற்கு

வர்த்தக நிலையங்களில் மட்டுமன்றி, உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்குப் பூங்காக்களில் பொருட்களை கொள்வனவு செய்யும்போதும், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமானதாகும். பொருள் விற்பனை செய்யப்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு, சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி பணம் அறவிட வர்த்தகருக்கு அனுமதி கிடையாது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது அவற்றின் விலையைச் சரிபார்ப்பதுடன், சரியான பற்றுச்சீட்டைப் பெற்றுப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறான அதிக விலை அறவீடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும்போது பற்றுச்சீட்டு முக்கியமான சான்றாக அமையக்கூடும்.

🛡️ நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சட்டபூர்வமான அதிகபட்ச சில்லறை விலைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

📞 நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles