ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கிறது என்பிபி அரசு: 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது. இவ்வாறு இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ தற்போதைய அரசாங்கம் நடந்துகொள்ளும் விதம் பற்றி குறைகூற முடியாது. அனுபவம் கொஞ்சம் குறைவு என்பதால் சிற்சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவர்கள் ஊழல்களில் இருந்து ஒதுங்கியுள்ளனர். போதைப்பொருள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.

அரச நிறுவனங்களுக்குரிய நியமனங்களின்போது நீதிக்கமையவே செயல்படுகின்றனர். தான்தோன்றித்தனமாக செயல்படவில்லை. அது விடயத்தில் அவர்களின் நடவடிக்கையை மதிக்கின்றேன்.

இதேபோல அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 2029 இல் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும்.

ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்கள் நம்மைகள் செய்கின்றனர் எனக் கூறமுடியாது. தமிழர் பிரச்சினை தொடர்பில் சிங்கள தலைவர்கள் இதற்கு முன்னர் எவ்வாறு நடந்துகொண்டனரோ அதுபோலவே இவர்களும் செயல்படுகின்றனர். வடக்கு, கிழக்குக்கு குறைவாகவே தரப்படுகின்றது. இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.

கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆட்சியின்கீழ் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஊழல்கள் இல்லை.” என்று சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles