“கள்ளத் தோணியென விமர்சித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்”

கள்ளத் தோணியென விமர்சித்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்: – இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

தோட்டத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் “கள்ளத்தோணி” எனக் குறிப்பிட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தோட்டத் தொழிலாளர்களை ‘கள்ளத்தோணி’ என அழைப்பதற்கு எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள்.

மன்னர் ஆட்சிக் காலங்களில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு இலங்கைக்கு வந்து குடியேறினார்களோ, அதேபோன்று பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முறையாக அழைத்து வரப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், குறித்த பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்” என செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக, பீற்று தோட்ட முகாமையாளரை, செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles