நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவு

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நுளம்புகள் உருவாகும் இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் சுத்தமாக்கல் நடவடிக்கை, புகைமூட்டல் நடவடிக்கை காரணமாகவே இந்த சாதக நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.

எதிர்கால டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பற்றியும் இதன்போது ஆராயப்படவுள்ளன.

நாட்டில் கடந்த 19 நாட்களில் 7 ஆயிரத்து 777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜுலை மாதமே 29 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles