Debit, Credit கார்டுகளில் பின்னால் இருக்கும் CVV எண் எதற்காக?-விழிப்புணர்வு உண்மை

இன்றைய டிஜிட்டல் உலகில் வங்கிகளில் வழங்கப்படும் டெபிட் கார்டு பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. அரசின் சலுகைகளுக்காவது வங்கிக் கணக்கும் டெபிட் கார்டும் வைத்திருக்க வேண்டும்.

டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும்போது CVV என்ற மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தித்தான் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் செய்வோம்; செய்ய முடியும்.

டெபிட் கார்டில் இருக்கும் 16 இலக்க எண் எதற்கென்று தெரியும், டெபிட் கார்டு பின் நம்பரின் தேவையும் நமக்குத் தெரியும். ஆனால், இந்த CVV எண் எதற்கு என யோசித்திருக்கிறோமா? அதற்கான பதிலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Card Verification Value என்பதன் சுருக்கம்தான் CVV. நேரடியாக ஒரு கடைக்குச் சென்று நமது டெபிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது நமது டெபிட் கார்டை நேரடியாகக் கொடுத்துத்தான் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஆனால், ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது நாம் பரிவர்த்தனை செய்யும் டெபிட் கார்டு நம்மிடம் தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான் CVV பயன்படுத்தப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் கடவுச் சொற்களைக் கூட மறந்துவிடக்கூடாது என சில தளங்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால், CVV எண்ணை Payment card industry Data security standards-ன் படி எந்தத் தகவல் தளத்திலும் சேமித்து வைக்கக்கூடாது என்ற விதிமுறை இருக்கின்றது.

நம் டெபிட் கார்டு எண், பின் நம்பர் மற்றும் காலாவதியாகும் தேதி என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தாலும் CVV எண் இல்லை என்றால் ஆன்லைன் மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.

எந்தத் தகவல் தளத்திலும் சேமிக்கப்படாததால் அந்த CVV எண்ணானது நம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பின்புறம் மட்டுமே இருக்கும், வேறு எந்த வகையிலும் CVV எண்ணைக் கண்டறிய முடியாது.

இதன் மூலம் நாம் கார்டு மூலம் மேற்கொள்ளும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்குக் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கின்றன CVV எண்கள்.

மேலும், எல்லா கார்டுகளிலும் CVV என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை, CSC (Card Security Code), CVC (Card Verification Code), CID (Card Identification Number) மற்றும் சில கார்டுகளில் CVV2 என்ற பெயரில் இருக்கும்.

இந்தியாவில் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளில் CVV என்ற பெயர்தான் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளில் CID என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் CVV எண் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. எவரேனும், CVV எண்ணைக் கேட்டால் கண்டிப்பாகக் கொடுத்துவிடாதீர்கள்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles