டிக்கோயா இரட்டைக் கொலை: சந்தேக நபர் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவை, பெற்றஷோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஹட்டன் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் பணிப்புரைக்கு அமைவாக, பொகவந்தலாவை பெற்றஷோ தோட்டப் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, அங்குள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

(மஸ்கெலியா நிருபர் – செ.தி.பெருமாள்)

Related Articles

Latest Articles