இலங்கையின் பிளாஸ்டிக் போத்தல் மீள்சுழற்சி, பொலியேஸ்டர் நூல் மற்றும் Monofilaments உற்பத்தியாளர்களான Eco-Spindles (Pvt) Ltd அதன் விஸ்தரிப்பு மூலோபாயத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஹொரணையில் அமைந்துள்ள அதி நவீன வசதிகள் கொண்ட உற்பத்தி தொழிற்சாலைக்கு 20,000 சதுரபரப்பை இணைத்துள்ளது.
சுற்றாடல் வசதிகளைக்கொண்ட உலகிலுள்ள இரண்டு நிறுவனங்களில் ஒன்றான Eco-Spindles இந்த விஸ்தரிப்பின் ஊடாக பொலியேஸ்டர் நூல் உற்பத்தித்திறனை இரட்டிப்பாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் அடிக்கல் நாட்டும் வைபவம் 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் PB ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வின்போது ஹொரனை ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் முதலீட்டு வலயத்தின் சிரேஷ்ட பிரதிப்பணிபாளர் சுஜீவ திலகுமார, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் சுற்றுச் சூழல் மாசுகட்டுப்பாடு மற்றும் வேதியியல் நிர்வகிப்புப் பிரிவு பணிப்பாளர் எஸ்.எம். வராஹேரா, BPPL Holdings இன் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் அனுஷ் அமரசிங்க மற்றும் Eco-Spindles இன் பிரதி பொது முகாமையாளர் மனோஜ் உவத்தே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த BPPL Holdings இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டொக்டர் அனூஷ அமரசிங்க, “Eco-Spindles இன்தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், எமது நாட்டின் சிறந்த நிலைத்தன்மைக்கும் அடித்தளம் அமைப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். உலகெங்கிலும், ஒரு சுழற்சி முறையான பொருளாதாரத்தை உருவாக்கி அதற்குள் பிரவேசிக்கவேண்டிய அவசர தேவையை மக்கள் உணர்ந்து எதிர்பார்த்திருக்கிறார்கள்.” என தெரிவித்தார்.
Eco- Spindles (Pvt) Ltdஎன்பது BPPL Holdings PLC இன் முழு உரிமம் பெற்ற இணை நிறுவனம் என்பதுடன் இலங்கையில் Polyethylene Terephthalate (PET) கழிவு போத்தில்களின் பெறுமதி சேர்க்கப்பட்ட ஒரேயொரு ஏற்றுமதியாளராகும், மேலும் PET போத்தல் கழிவுகளை உருமாற்றுவதன் மூலம் நாட்டின் சுற்றுச் சூழல் சீரழிவை மாற்றியமைக்கும் தனது செயற்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ளது. PET போத்தல்களை சேகரித்து சிறந்த ஏற்றுமதி பொருட்களை உருவாக்குவதனால் சிறந்த சந்தைப் பெறுமதியை உருவாக்கியுள்ளது.
“மீள்சுழற்சி செய்யப்பட்ட PET துண்டுகளிலிருந்து பொலியேஸ்டர் நூலை நேரடியாக உற்பத்தி செய்யக்கூடிய ஒரேயொரு நிறுவனம் என்ற வகையில், இவ்வாறான தயாரிப்புக்களுக்கான வேகமாக அதிகரித்துள்ள கேள்விக்கான தேவையை பூர்த்திசெய்ய நாம் சிறந்த இடத்தில் உள்ளோம்.
இதன்மூலம் தேசிய பொருளாதாரத்திற்கான முக்கிய அந்நிய செலாவணியை உருவாக்க முடிகிறது, அதேநேரம் நம் அனைவருக்கும் ஒரேயொரு பயன்பாடு மாத்திரமே என்று கருதப்பட்ட ஒருமூலப் பொருளைப் பயன்படுத்தி நம் காலத்தின் மிகமோசமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் காரணியை உருமாற்ற உதவுகிறது. தற்போது இலங்கையில் வாழும் மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒருநிலையான எதிர்காலத்திற்கான திறவுகோளைக் கொண்டிருக்கும் தீர்வுகள் இவைதான்.” எனடொக்டர் அமரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதிலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட நூலுக்கான தேவை அதிகரித்துவருகிறது, முன்னணி சர்வதேச பெஷன் தயாரிப்புக்கள் தற்போது ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொழில்சாலைகள் மூலம் வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்கள் தமது தயாரிப்பக்களுக்காக அதிகளவு நூல்களைப் பயன்படுத்துகின்றன.
அனைத்து நாடுகளிலும் நிலைத்தன்மையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒருவிடயமாக மாறிவருவதால் இந்த கோரிக்கை தவிர்க்க முடியாமல் தொடர்து அதிகரிக்கிறது.
Eco-Spindles ஆண்டுக்கு 700 தொன் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியேஸ்டர் நூலை உற்பத்தி செய்வதற்கான ஆதாரங்களைக்கொண்டுள்ளது. அதன் விரிவாக்கப்பட்ட உற்பத்தி வசதிகள் நிறைவடைந்த நிலையில், இந்ததிறன் ஆண்டு உற்பத்தியில் மேலும் 900 தொன் அதிகரிக்கும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அதன் தற்போதைய திறன்களைவிட இரண்டு மடங்கு அதிகரிப்பாகும்.
தற்போதுள்ள கேள்வியை எம்மால் வழங்க முடியாது என்பது உண்மைதான், இருந்தாலும், இந்த விஸ்தரிப்பின்மூலம் Eco-Spindles மூலோபாய நடவடிக்கையானது அனைத்து பங்குதாரர்களுக்கும் கணிசமான நேரடி மற்றும் மறைமுக வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அபரிமிதமான ஆற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். மேலும் உள்ளூர் மீள் சுழற்சி துறையானது ஒரு வித்தியாசத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும்.
PETபிளாஸ்டிக்என்பதுதற்போதுஉலகில்மிகவும்அதிகமாகமீள்சுழற்சிசெய்யப்படும்பிளாஸ்டிக் ஆகும். இது உலகளாவிய ரீதியில்மீள் சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் சந்தையில் 57%க்கும் அதிகமாகவுள்ளது. பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (2017) அறிக்யைின்படி, மீள் சுழற்சி செய்யப்பட்ட PET சந்தை 2025ஆ ம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 66.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Eco-Spindles (Pvt) Ltd நிறுவனம் PET கழிவு போத்தல்களை சேகரிப்பதில் செல்வாக்கு செலுத்துவதுடன், பெறுமதி கூட்டப்பட்ட தயாரிப்புக்களை உருவாக்குவதிலும் கணிசமான பங்குவகிக்கிறது. 2019/20ஆம் ஆண்டில், Eco-Spindles (Pvt) Ltd, 81 மில்லியனுக்கும் அதிகமான PET போத்தல்களை மீள் சுழற்சி செய்ததுடன், இதுசுமார் 2.3 மில்லியன் கிலோகிராம் PET ஆகும்.
பதிவு செய்யப்பட்டமீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு சேகரிப்பாளர்கள்மற்றும் 19 ஒன்று சேர்க்கும் தளங்களின் 400 வலுவான வலைப்பின்னல் மூலம் நிறுவனம் தனது PET போத்தல்கழிவுகளைஆதாரமாகக்கொண்டுள்ளது, மேலும் சிவனொளிபாத மலை மற்றும் கதிர்காமம் கழிவு நிர்வகிப்பு திட்டம், கரையோர பிளாஸ்டிக்போன்ற நிலைத்தன்மையை மையமாகக்கொண்ட பொது முயற்சிகளிலும் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீள்சுழற்சி திட்டம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள் போன்றவையும் இதில் அடங்கும்.
BPPL Holdings PLC தொடர்பில்
1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட BPPL Holdings PLC அதன் பிரிவின் கீழ்முழுமையாக அதற்குச்சொந்தமான இரண்டுதுணை நிறுவனங்களை நிறுவியுள்ளது, அதாவது Eco-Spindles (Pvt) Ltd மற்றும் Beira Brush (Pvt) Ltd ஆகியனவாகும். ஒவ்வொரு பிராந்தியத்திலும் கணிசமான சந்தைப்பங்கைக்கொண்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச சந்தைகளுக்கு மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியேஸ்டர்நூல், Monofilaments மற்றும் தொழில்முறை மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் கருவிகளைகுழு ஏற்றுமதி செய்கிறது. ‘Tip Top என்ற தயாரிப்பின்கீழ் உள் நாட்டில் சில்லறை விற்பனை செய்யப்பட்ட வீட்டுதுப்பரவு தூரிகைகளையும் இந்தகுழு உற்பத்திசெய்கிறது.