டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GAMOA) தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் கொன்தசிங்க, பொதுமக்களினதும் டெங்கு நோயாளர்களினதும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் ஒரு புதிய மருந்தை அறிமுகப்படுத்தி, அதனை மாகாணத்தில் உள்ள வீடுகளுக்கு விநியோகித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
புகைமூட்டம் (fogging) மூலம் நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தூள்களையும் இத்திணைக்களம் விநியோகித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பொருட்களை தயாரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் அரசாங்க நிதி செலவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கொன்தசிங்க, விநியோகிக்கப்படும் பொருட்களை தூக்கி எறிய வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.










