பதுளையில் தீ விபத்து: 2 லயன் குடியிருப்புகள் சேதம்; 4 குடும்பங்கள் இடம்பெயர்வு

பதுளை – ஹாலிஎல, உனுகலை தோட்டத்தின் மொரகலை பிரிவில் உள்ள 3 ஆம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இத்தீ விபத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், தற்காலிகமாக மொரகலை தமிழ் வித்யாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் ஆனந்தராஜ் பாபு மற்றும் ஹாலிஎல பிரதேச சபை உறுப்பினர் திரு. செல்வகுமார் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக அரச அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

செய்தி -ஊவா சுரேன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles