முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று ஆஜரான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சுமார் 7.4 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ச கேட்போர் கூடத்திற்கு நாற்காலிகளை விநியோகிப்பதற்காக சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, அதற்கான ஒப்பந்தத்தை தனக்குத் தொடர்புடைய நிறுவனம் ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles