எகிறியது எரிபொருள் விலை!

நாட்டில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஓட்டோ டீசல் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  லீற்றரொன்றின் புதிய விலை 392 ரூபாவாகும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லீற்றரொன்றின் புதிய விலையாக 458 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் லீற்றரொன்றின் விலை 10  ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 265 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு,   புதிய விலையாக 410 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு  புதிய விலையாக 470 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles