கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், பிவாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

பிரதீப் ராவத்தின் மேனேஜர் சித்தார்த் திவாரி இந்த துயரமான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்தது.

இதனால்,கடந்த சில மாதங்களாகவே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று ( 5-) நடைபெறும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

மகாபாரதம் டூ கஜினி வரை

நடிகர் பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொடரில் அஸ்வத்தாமனாக நடித்து தன் கலைப்பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லகான் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கஜினி’ படத்தில் இரட்டை வேடத்தில் வந்து மிரட்டினார். அதே கதாபாத்திரத்தில் அமீர் கான் நடித்த இந்தி ரீமேக்கிலும் நடித்து பாலிவுட்டிலும் புகழ்பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, போஜ்புரி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles