2047 இற்குள் இந்தியாவை வல்லரசாக்குவதே இலக்கு!

“சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதன் சில பகுதிகள்: இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி, ஒவ்வொருவர் மனதிலும் மூவர்ணக்கொடி உள்ளது. இந்த சுதந்திர தினத்தில் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய மகாத்மா காந்தி மற்றும் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து வந்தே மாதரம் பாடல் எதிரொலிக்கும் தருணம் இது. புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு தேசம் உற்சாகத்துடனும் ஆர்வமுடனும் முன்னேறி வருகிறது.

2047க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரிய கனவை இந்தியா கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக மாறத் தீர்மானிக்கும்போது அது நமது துணிச்சலின் அடையாளமாக அமைகிறது. உலகம் நம்மை மாறுபட்ட கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறது.

கடந்த 12 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தி 4 மடங்கும், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை உற்பத்தி 5 மடங்கும், மின்னணு சாதன உற்பத்தி 7 மடங்கும் அதிகரித்துள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனை 100 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.

சிறிய கனவுகள் இனி போதாது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும். ஏனெனில் பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்தி, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லையை அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். உறுதிப்பாடு உறுதியாக இருக்கும்போது சிரமங்கள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும்கூட முன்னேறுவதற்கான வழியை உருவாக்கும் திறன் இயல்பாகவே உருவாகிறது.

சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது அதாவது 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வை. நாம் அதை அடைய வேண்டும். நமது 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியாலும், அயராத உழைப்பு மனப்பான்மையாலும் இந்த இலக்கு எட்டப்படும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles