நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கன மழை

நாட்டின் இன்று (31) பல பகுதிகளில் கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, பலத்த காற்று மற்றும் கனமழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

Related Articles

Latest Articles