பதிவு செய்யப்படாத வாகனங்கள் மற்றும் ஃபோடோன் டிரக் வண்டிகளுக்காக ஒப்பிட முடியாத லீசிங் வசதிகளை வழங்குகிறது
இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடிகளான இந்திரா டிரேடர்ஸுடன் மேற்கொண்டுள்ள கூட்டுமுயற்சியை புதுப்பிப்பதற்கு அண்மையில் நடவடிக்கை எடுத்தமையானது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனங்கள் மற்றும் ஃபொடோன் டிரக் வண்டிகளுக்காக விசேட லீசிங் வசதிகள் உள்ளிட்ட அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆகும்.
இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டுமுயற்சி குறித்த உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்தும் நிகழ்வு HNB தலைமையகத்தில் இடம்பெற்றதுடன் HNB வாடிக்கையாளர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜேய் விஜேமான்ன மற்றும் இந்திரா டிரேடர்ஸின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹஷிந்திர சில்வா ஆகியோரினால் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியான அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் HNB ஊழியர்களுக்காக விசேட பலப்படுத்தும் யோசனை முறைமைகளும் முன்வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த கூட்டு முயற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி காஞ்சன கருணாகம, “HNB மற்றும் இந்திரா டிரேடர்ஸுக்கு இடையிலுள்ள ஒப்பந்தத்தை புதுப்பித்து மேலும் முன்னோக்கி கொண்டுசெல்வதே எமது நம்பகமான வாடிக்கையாளர்களின் வாகனக் கனவை நனவாக்குவதற்காக அவர்களுக்காக சிறந்த சேவையை வழங்கும் முயற்சியாக இதனைக் கருத முடியும். பலத்தில் சிறந்த, நீண்ட காலம் நீடிக்கக் கூடிய, சிறந்த செயல்திறன் மிக்க டிரக் வாகனத்தை நாட்டிற்கு அறிமுகம் செய்யும் கௌரவத்தை வென்றெடுத்துள்ள இந்திரா டிரேடர்ஸுடன் ஒப்பிட முடியாத சேவை தரங்கள் காரணங்களால் தொடர்ச்சியான நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.
எமது இந்த கூட்டு முயற்சி புதிய வாகனத்திற்கான கனவினை நனவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆறுதலாக இருப்பதுடன் அதன் மூலம் விற்பனையின் பின்னரும் சிறந்த வாடிக்கையாளர் சேவை வசதிகளும் வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
இந்திரா டிரேடர்ஸிடமிருந்து வாகனமொன்றை கொள்வனவு செய்யும் HNB வாடிக்கையாளர்களுக்கு 4.5 மில்லியன் பெறுமதியான ஆயுள் காப்புறுதியொன்று வழங்கப்படுவதுடன் HNB General Insurance இடமிருந்து கழிவுடன் கூடிய மாதாந்த தவணை மற்றும் HNB லீசிங்கிடமிருந்து விசேட கழிவுகளும் மற்றும் அனுகூலங்களுடன் கூடிய இலவச கடன் அட்டையொன்றும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்திரா டிரேடர்ஸ் விற்பனை மற்றும் விநியோக பிரதானி ஹஷீந்திர டி சில்வா, “HNB உடன் இந்திரா டிரேடர்ஸ் ஏற்படுத்திகொண்டுள்ள கூட்டுமுயற்சியின் மூலம் இலகுவான மற்றும் மிகவும் நன்மையான லீசிங் தீர்வுகள் கிடைக்குமென வாடிக்கையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வருடம் இந்த சேவைகளின் மாற்றம் எதுவும் நிகழாது என்பதுடன் எமது புரிந்துணர்வின் மூலம் குறைந்த வட்டி விகிதம் போன்றே எமது விற்பனையின் பின்னரான விசேட சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருப்பதாக குறிப்பிட விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.
மேலும் அனைத்து HNB வாடிக்கையாளர்களுக்கும் இந்திரா டிரேடர்ஸினால் ஊழியக் கட்டணம் இன்றி இரு வாகன சேர்விஸ்கள் வழங்கப்படும். இந்த மேம்பாட்டு காலத்திற்குள் HNB வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்யும் அனைத்து வாகனங்களுக்குமான பதிவுக் கட்டணம் இலவசம் என்பதுடன் கொள்வனவு செய்யும் அனைத்து வாகனங்களுக்காகவும் பொழுதுபோக்கு கட்டமைப்பும் மற்றும் ரிவர்ஸ் கெமரா ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திரா டிரேடர்ஸ் வாகனத் துறைக்குள் பல்வேறு வியாபார பிரிவுகளுக்கு பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்ந்த தரத்தில் மோட்டார் வாகனம் மற்றும் அதனை அண்டிய சேவைகளை வழங்கும் இந்திரா டிரேடர்ஸ் இன்று சிறந்த தரத்திலான வாகனங்களை வழங்குவது மட்டுமன்றி போக்குவரத்து தீர்வுகளையும் வழங்குகின்றது.
நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்களைக்கொன்டுள்ள HNB இலங்கையின் மிகப்பெரிய தொழில்நுட்ப ரீதியான புத்தாக்கங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றாகும். இங்கிலாந்தில் நன்மதிப்புப் பெற்ற ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகளுக்குள் HNB அண்மையில் பட்டியலிடப்பட்டது.
தேசிய நீண்டகால வகைப்படுத்தலின் கீழ் HNBக்கு Fitch Ratings மூலம் AA-(lka)இன் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(இடமிருந்து) இந்திரா டிரேடர்ஸ் விற்பனை முகாமையாளர் ரசிக்க டி சில்வா, பொது முகாமையாளர் சஜினி சில்வா, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹஷிந்திர சில்வாவுடன் HNBஇன் தனிநபர் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனை வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன, தனிப்பட்ட நிதி சேவைகள் பிரதானி காஞ்சன கருணாகம, லீசிங் பிரிவு பிரதானி நிலுக அமரசிங்க, லீசிங் தொடர்பான துணை பொதுமுகாமையாளர் ரொஷான் டி சில்வா மற்றும் வர்த்தக மேம்பாட்டு நிறைவேற்று அதிகாரி மஹேஷ் ரத்நாயக்க ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.