நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் கவலையளிக்கின்றது. மேற்படி நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சிறைச்சாலையின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
“கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தமை தொடர்பில் கவலையடைகின்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி, இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் மேலும் கூறினார்.










