சிஸ்டம் பெயில்: சிறைச்சாலை சம்பவத்துக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சி மற்றும் திறமையின்மையை நீர்க்கொழும்பு சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த சமயம் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, மேற்படி சம்பவத்துக்கு தற்போதைய அரசாங்கமும் இந்த சம்பவத்திற்கு முழுமையாக பொறுப்புக்கூற வேண்டும்.

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று நீர்கொழும்பு சிறைச்சாலையை மையமாகக் கொண்டு இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் தற்போதைய முறைமை தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

நாட்டினுள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா என கேள்வி எழுப்புகிறேன்.

சிறைச்சாலைகளுக்குள் குறிப்பிட்ட மனிதாபிமான ரீதியிலான நிர்வாகமொன்றை முன்னெடுக்க முடியாது ஏன் என கேள்வி எழுப்புகிறேன். நாட்டு மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று அவசியமாகும்.

அரசாங்கத்திற்கு விரும்பியவாறு அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுவாக அமையாது, இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையொன்று அவசியம்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles