” இலங்கைக்கு வரும் ICC தலைவரை பாராளுமன்றத்திற்கு அழைத்து உண்மை நிலைவரத்தை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) தலைவர் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு வருகை தரும் அவரை நாடாளுமன்றம் அழைக்க வேண்டும். அவ்வாறு அழைப்பு விடுத்து, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஜனநாயகம் என்ற போர்வையில் பொய் கூறி, இந்நாட்டில் கிரிக்கெட்டை எவ்வாறு அழித்து வருகின்றது என்பதை அவருக்கு விளக்க வேண்டும். இல்லையெனில் தவறான கருத்து சர்வதேசத்திற்கு செல்லும்.” – என்றார் எதிர்க்கட்சி தலைவர்.
