2027 உலக்கிண்ணம்: இலங்கை உட்பட 10 அணிகள் நேரடி தகுதி

27 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணி நேரடித் தகுதியைப் பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் சர்வதேச தரவரிசையின் அடிப்படையில் நேரடித் தகுதி பெற்ற எட்டு அணிகளுடன் இலங்கையும் இணைந்துள்ளது.

செப்டம்பர் 30 ஆம் திகதி நிலவரப்படியிலான ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முன்னிலையில் உள்ள சிறந்த 8 அணிகள் இத்தொடருக்கு நேரடியாகத் தகுதி பெறுகின்றன (கூட்டு நடத்தும் நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே தவிர்த்து).

அயர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இப்பட்டியலில் இணைந்த கடைசி அணியாக மாறியுள்ளது.

இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. அதேவேளை தொடரை நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தானாகவே தகுதி பெற்றுள்ளன.

இந்த முடிவுகளின்படி, மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) அணி நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளதுடன், உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் (World Cup Qualifier) மூலமாகவே தொடருக்குத் தகுதி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

2027 ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய நாடுகளால் கூட்டுப் பொறுப்பில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles