‘ICUக்களில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவு’

” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருந்த இடப்பற்றாக்குறையும் தற்போது இல்லை. எனவே, இந்நிலைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் இனிவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும்.” – என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிர  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே கடந்தகாலங்களில் கூடுதல் தொற்றாளர்கள் பதிவானார்கள். அப்பகுதிகளிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அதேபோல கடுமையான நோய் குறிகுறிகள் தென்படுபவர்களின் எண்ணிக்கையும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

குறிப்பாக கடந்த இரு மாதங்களில் அதிகளவானோர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர். இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஒட்சீசன் வழங்க வேண்டியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சென்றது. தற்போது இந்நிலைமை இல்லை. கொரோனா தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டில்களில் இடம் உள்ளது. ஒட்சீசன் உள்ளடங்களான கட்டில் வசதியும் உள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த பெறுபேறு கிட்டியது. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையக்கூடும்.

இந்நிலைமையை தக்கவைத்து, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். அதேபோல இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்கள்கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles