Ideal Finance தனது கிளைகளை மேலும் விரிவுப்படுத்துகிறது

தனது வளர்ச்சியின் முக்கிய அங்கமாக Ideal Finance Limited (IFL) வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் முக்கியமான இடங்களில் நான்கு கிளைகளை திறப்பதன் மூலம் தனது வலையமைப்பை 17 இடங்களில் விரிவுப்படுத்தியிருக்கிறது.

IFL, புதிய 16 கிளைகளையும் சேர்த்து நடப்பு நிதியாண்டிற்குள் தனது கிளை வலையமைப்பை இரட்டிப்பாக்க திட்டமிட்டள்ளதாக முன்னர் அறிவித்தது. அதன்படி சுண்ணாகம,; நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை ஆகிய இடங்களில் புதிய கிளைகளை திறந்துவைத்தது. இங்கு நிலையான வைப்புகள்,குத்தகை வசதிகள் மற்றும் தங்கக்கடன்கள் போன்ற நிதித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Ideal Financeஇன் துணை தலைவர்,அரவிந்த டி சில்வா, ‘முக்கிய கிராமப்புறங்கள், நகரங்கள் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நகர்புற பகுதிகளில் Ideal Finance’s சரியான நேரத்தில் தனது கிளைகளை விரிவுபடுத்துவது எங்கள் சேவைகளை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக அணுக உதவுகிறது.

அதேசமயம் நாட்டின் பொருளாதார மாற்றங்களிலிருந்து நிறுவனத்தைப் பயனடையச் செய்கிறது மற்றும் கிளை வலையமைப்பை வலுப்படுத்துவது நிறுவனத்தின் முன்னேற்றத்தினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் என நாங்கள் நமபு; கிறோம்’ எனக் கூறினார்

IFL’sஇவ் புதிய கிளைகள் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அதிக வளர்ச்சி சாத்தியமுள்ள வர்த்தக மையங்ககளில் திறப்பதன் மூலம் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் Mahindra மற்றும் Mahindra Financial Services Limited (MMFSL) ரூபா. 2 பில்லியன் வெளிநாட்டு நேரடி முதலீட்டை செய்ததன் மூலம் இப்போது 58.2% பங்குகளுடன் Ideals Finance’sஇன் மிகப்பெரிய பங்குத்தாரராக உள்ளது. இது IFL நிறுவனத்தின் கீழ் 11 பில்லியன் USDக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் ஆதரவைப் பெறுகிறது. இது இலங்கையின் முழு வங்கித்துறையையும் விட அதிகமாகும்.

MMFSL இதிலிருந்து முதலீட்டைப் பெற்றதை தொடர்ந்து Ideal Finance, Fitch மதிப்பீட்டில் ‘BB-(lka)’ இருந்து ‘AA-(lka)’ஆக மேம்படுத்தப்பட்ட ஸ்த்திரத்தன்மைக்கு உயர்த்தபபட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் (March. 31. 2021 உடன் முடிவடைந்தது) தொற்று நோய் சமயத்திலும் தனது சிறநத் வருடாந்தர நிதிச் செயற்திறனை கொடுத்தது. அதன் முந்தைய ஆண்டின் அனைத்து முக்கிய நிதி குறிகாட்டிகளையும் மேம்படுத்துகிறது.வரிக்கு முந்தைய இலாபம் (PBT) 76% அதிகரித்து ரூபா.288.4 மில்லியனாக, ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (YOY), வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) 74% அதிகரித்து ரூபா. 183.8 மில்லியனாகக் குறைந்தது (YOY). முந்தைய வருடத்தில் 5.2%ஆக இருந்த Gross Non-performing Loans (NPL) விகிதம் 3.3%ஆக இவ் நிதியாண்டில் மேம்பட்டுள்ளது.

Ideal Finance Ltd (IFL) இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு NBFI ஆகும். 2021 மார்ச்சில்; கிராமப்புறங்களில் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும நகரங்களில் தெளிவான நோக்கத்துடன் செயல்பாடுகளைத் தொடங்கியது.

அதன் கடன் வசதிகளில் தங்கக்கடன்கள், SME கடன்கள், தனிநபர் கடன்கள், மோட்டார் கார்கள், முற்ச்சக்கர வண்டிகள், விவசாய வாகனங்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் உள்ளன.

வியாபாரத்தின் நிலையான வருடாந்தர வளர்ச்சியை பதிவு செய்யும் அதேவேளையில் ஒரு தரமான கடன் கொடுக்கும் வழியையும் IFL உருவாக்கியுள்ளது.

பட விளக்கம்
1. Ideal குழும, தலைவர் – நளின் வெல்கம
2. Ideal Finance துனைத் தலைவர் – அரவிந்த டி சில்வா
3. புதிதாக திறக்கப்பட்ட கிளைகள் சுண்ணாகம் நெல்லியடி, ஜா-எல மற்றும் கடுவலை

 

Related Articles

Latest Articles