ஒன்றிணைந்த ஆடைத் தொழிற்சாலை சங்கங்களின் மன்றமான (JAAF) அண்மையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IFC) ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியது மற்றும் “Better Work” திட்டத்தின் (BW) மூலம் அதன் பங்குதாரர்களின் பங்கேற்பை அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது.
கொவிட்-19க்குப் பிந்தைய காலகட்டத்தில் இலங்கையில் ஆடைத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
இலங்கை ஆடைத் தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் JAAF மற்றும் அதன் உறுப்பினர்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பாலினம், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகிய துறைகளில் வழிகாட்டுதல் மற்றும் சட்டத்தை மேம்படுத்த “Better Work” திட்டத்துடன் ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆடைத் துறையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை (SMEs) மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் துணைபுரியும்.
“Better Work” திட்டத்தை ஆரம்பிப்பது குறித்து ILO மற்றும் IFC உடனான எங்கள் கலந்துரையாடல்கள், மக்களை மையமாகக் கொண்ட, நெறிமுறை, பொறுப்பு மற்றும் நிலையான விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதற்கான எங்கள் வலுவான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.” என JAAFஇன் பொதுச் செயலாளர் டியூலி குரே தெரிவித்தார்.
“ஒட்டுமொத்தமாக, BW திட்டம் எப்போதும் பங்குதாரர்களை மேம்படுத்துவதிலும் வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. சிறந்த பணிச்சூழலை உருவாக்குதல், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, வணிகப் போட்டித்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான எங்கள் முயற்சிகளையும் இது மேம்படுத்துகிறது.”
“உள்ளூர் பங்குதாரர்களுடன் மட்டுமல்லாமல், ஆடைத் துறையில் உலகளாவிய பங்குதாரர்களுடனும் ஐக்கியமாகவதற்கும் மற்றும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் இந்த “Better Work” திட்டம் ஒத்துழைக்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஆடைத் துறையில் பணிச்சூழலை மேம்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும்.” என குரே மேலும் தெரிவித்தார்.