IMF ஐ நாடுவதால் ஏற்படும் நன்மை! டிலான் விளக்கம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஏப்ரல் மாதமளவில் பேச்சுகளை ஆரம்பிக்கும். அவ்வாறு ஆரம்பித்தால் சர்வதேச நிதி தரப்படுத்தல் பட்டியலில் உரிய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வதேச நாணய நிதியத்துடன் ஏப்ரல் மாதம் பேச்சு நடத்தப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்வும் நல்லது. பேச்சு நடத்தவிருக்கும் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. சர்வதேச நாணய நியதித்தால் முன்வைக்ப்படும் நிபந்தனைகளை நாம் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் சர்வதேச தரப்படுத்தல்களில் உரிய இடத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் சர்வதேச நிதி நிறுவனங்களின் பின்னணியிலும் மேற்குலக ஆதிக்கம்தான் நிலவுகின்றது.

அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்க்க சர்வக்கட்சி கூட்டத்தையாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles