IMF ஆரம்பக்கட்ட இணக்கப்பாட்டுக்கு பரிஸ் கிளப் வரவேற்பு!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை தாம் வரவேற்பதாக பரிஸ் கிளப் அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைபெறு தன்மை ஆகியவற்றை மீள் உறுதிசெய்வதில் இது முக்கிய படிக்கல் என்றும் பரிஸ் கிளப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் சலுகைகள் குறித்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கு மதிப்பீடு ஒன்றை செய்ய வேண்டிய தேவை இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம் என்றும் பரிஸ் கிளப் சுட்டிக்காட்டியுள்ளது.

பரிஸ் கிளப், இக்கடன் சலுகை செயல்முறைக்கு உதவுவதற்கும், பரிஸ் கிளப் அங்கத்தவர் அல்லாத இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணைந்து உரிய நேரத்தில் நிதியதவியை பெற்றுக்கொடுப்பதற்கும், சுமையை பகிர்ந்துகொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் மற்றும் பரிஸ் கிளப் அங்கத்தவர் அல்லாத இரு தரப்பு கடன் வழங்குனருடன் அடுத்த கட்ட கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரிஸ் கிளப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles