சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கை என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
” சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள விடயங்கள் எவை என்பன குறித்து எதுவும் தெரியாது. இதற்கான நடவடிக்கை இரகசியமாக இடம்பெறுகின்றது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. உடன்படிக்கையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும்.” எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.










