IMF அறிக்கை கிடைக்கவில்லை – சர்வக்கட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் தகவல்

” இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.” என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டின்போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் பதில் அளிக்கையிலேயே நிதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அப்படியானால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியை அழைத்து விசாரிப்போம் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

” இல்லை, வரைவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை வழங்கமுடியாது. முழுமையான அறிக்கையையே வெளியிடமுடியும்.” – என்று பஸில் ராஜபக்ச பதில் அளித்தார்.

Related Articles

Latest Articles