3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா

இலங்கைக்கு 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துப் பொருள்களுடன் சிறப்பு விமானம் ஒன்றை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் C-130J விமானம், 3 தொன்னுக்கும் அதிகமான காசநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொது சுகாதார முறைமைக்கு ஆதரவளிப்பதில் இந்திய உறுதியாக இருப்பதாகவும் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles