இலங்கையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு தொடரில் நாட்டிற்கான முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து பதிலளித்த இலங்கை அணியை 69 ரன்களுக்குச் சுருட்டி, இந்தியா அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா கூட்டணி இந்தியாவிற்கு அதிரடி தொடக்கத்தை அளித்தது. இந்த இணை 60 பந்துகளில் 99 ரன்களைக் சேர்த்ததுடன், முதல் ‘பவர் பிளே’ முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைக் குவித்தது.

அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 7 சிக்ஸர்கள் உட்பட 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். அவருக்குத் துணையாக ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். சமுதி பிரபோதா பந்துவீச்சில் ஷபாலி ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, 3-வது வீரராகக் களமிறங்கிய தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, சுகந்திகா குமாரி வீசிய பந்தில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 49 ரன்கள் விளாசி, இந்திய அணியின் ஸ்கோரை 200 கடக்க உதவினார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களைக் குவித்தது. இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.

217 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலிருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சரித்த இந்திய அணி, இலங்கையை 69 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி 147 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களான தீப்தி சர்மா, ஷபாலி வர்மா மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் இணைந்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

முன்னதாக, 2023-இல் சீனா ஹங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த இறுதிப்போட்டியில் 79 ரன்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்தார்.

முன்னதாக, அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles