உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்குவதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.