ஈரான் கப்பல்மீது தாக்குதல்: 87 சடலங்கள் மீட்பு!

இந்து சமுத்திரத்தின் அமைதிதான் இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அதற்கான உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லையில் ஈரான் போர்க்கப்பலொன்று தாக்குதலுக்கு இலக்கான விவகாரம் தொடர்பிலேயே அவர் வினா எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“ ஈரான் கப்பலில் இருந்து 32 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

87 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன் வசதி இல்லை. எனவே, தனியார் துறையிடமிருந்து இரு கொள்கலன்கள் பெறப்பட்டுள்ளன.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்கின்றன.

இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக அனைத்து தலையீடுகளும் மேற்கொள்ளப்படும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நாம் செயல்பட்டுள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் நோக்கி கருத்துகளை வெளியிடமால், எதிரணிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles