அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்தை ஈரான் ராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது.
அமெரிக்கா தனது தோல்விகளை ஒரு உடன்படிக்கையாகச் சித்தரிக்க முற்படுகின்றது என ஈரானின் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பாகரி தெரிவித்தார்.
ஈரானிய மக்களுக்கு எதிரான விரோதப் போக்குகள் அமெரிக்காவின் எண்ணத்திலிருந்து முழுமையாக நீக்கப்படும் வரை எந்தவொரு சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதையச் சூழலில் மட்டுமல்லாது, வருங்காலத்திலும் அமெரிக்காவுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் ஈரான் ராணுவம் உறுதியாக உள்ளது என்பதை அவரது கருத்து வெளிப்படுத்துகின்றது.
