சவூதிக்கு எதிராக ஈராக் நிலப்பரப்பை பயன்படுத்த இடமளியோம்: அந்நாட்டு பிரதமர் உறுதி

சவூதி அரேபியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஈராக்கிய நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று ஈராக் பிரதமர் அலி பலே அல்-சைதி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு (MBS) உறுதி அளித்துள்ளதாக ஈராக்கிய செய்தி நிறுவனம் (INA) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் பதவி ஏற்ற பிறகு சவூதி அரேபியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக அல்-சைதி புதன்கிழமை ரியாத்தை சென்றடைந்தார்.

பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு எதிராக ஈராக்கில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதையும் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட அதிவிரைவுத் தாக்குதல்களின் போது, சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்த் தொடர் கடந்த மாதம் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது.

ஹோர்முஸ் ஜலசந்திக்கு மாற்றீடாகச் சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த இந்த ஏற்றுமதிப் பாதையை, இத்தாக்குதல் காரணமாகத் தற்காலிகமாக மூட வேண்டிய நிலைமை ரியாத்துக்கு ஏற்பட்டது.

நாளுக்கு 7 மில்லியன் பேரல் எண்ணெயை எடுத்துச்செல்லும் திறன் கொண்ட இந்தக் குழாய்த்தொடரின் இயக்கம் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதல் ஈராக்கில் இருந்தே முன்னெடுக்கப்பட்டதாகச் சவூதி அரேபியா தெரிவித்திருந்தது. இது தொடர்பில் ஈராக் மேற்கொண்ட சுயாதீன விசாரணையிலும், இத்தாக்குதல்கள் ஈராக்கிய நிலப்பரப்பிலிருந்தே நடத்தப்பட்டன என்று முடிவு செய்யப்பட்டது.

இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்காத போதிலும், ஈராக்கில் ஈரானின் ஆதரவு பெற்ற பல ஆயுதமேந்திய குழுக்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles