ISIS வட்ஸ்அப் குழு குறித்து தகவல் இல்லை! உறுதிப்படுத்தாத தகவல்களைப் பகிர்வது தண்டனைக்குரிய குற்றம்! முழுமையான விபரம்

ISIS அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புலனாய்வுப் பிரிவினர் சேகரிக்கும் தகவல்கள் குறித்த ஆவணங்களைப் பகிர்வது, தண்டனைக்குரிய குற்றம் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ISIS அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் குழு ஒன்று குறித்த புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆவணம் குறித்து மலையக குருவி, பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவுடன் தொடர்புகொண்டு கேட்டது. இதற்குப் பதிலளித்த பொலிஸ் பேச்சாளர், குறித்த ஆவணம் உண்மை என்ற போதிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குறித்த ஆவணம் தொடர்பாக பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்ற தகவல்களை சேகரித்து அதுகுறித்து பொலிஸ் திணைக்கள புலனாய்வுப் பிரிவு ஆராய்வது வழமையாகும். தேவைப்படும் பட்சத்தில் இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரியுடன் பகிர்ந்துகொள்ளப்படும். இவ்வாறு தகவல் ஒன்று கிடைப்பதும் பகிர்வதும், அவ்வாறான சம்பவமொன்று நடைபெறும் என்பதை உறுதிசெய்ய முடியாது.

புலனாய்வுப் பிரிவினரால் இரகசியமாக சேகரிக்கப்படும் தகவல்களை அல்லது ஆவணங்களை பகிரங்கப்படுத்துவது, அரச இரகசிய சட்டமூத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் தகவல்களை கணனிகள் மூலம் பகிரங்கப்படுத்துவது கணனி குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்குரிய ஆவணமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உயர் அதிகாரியொருவரினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப் குழுவொன்று குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த வட்ஸ்அப் குழு குறித்த தகவல்கள் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வது குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இவ்வாறான ஆவணங்களைப் பகிர்ந்துகொள்வதையோ, பரப்புவதையோ தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.” என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவ்வாறான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதன் மூலம் இணையத்தளப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மறைமுக முயற்சியாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles