“நாகரிகம் அழியும்” என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“நாகரிகம் அழியும் என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது. ஆனால், அவர்கள் அதை மறந்து விட்டு பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இருப்பினும், அவர்கள் திரும்பி வந்து, நாம் விரும்பும் அனைத்தையும் நமக்குத் தருவார்கள் என்று நான் கணிக்கிறேன்” என்று கூறினார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா, ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
சுமார் 21 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.










