கதிரேசன் தமிழ் வித்தியாலய மாணவிகள் கரப்பந்தாட்டத்தில் சாதனை!
பசறை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மஹதோவ பது/ கதிரேசன் தமிழ் வித்தியாலயம் ( மஹதோவை கீழ் த.வி ) குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது.
18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில், இவ்வித்தியாலய மாணவிகள் வரலாற்றில் முதன்முறையாக முதலாமிடத்தைப் பெற்று சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர்.
அத்தோடு16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியிலும் மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றிக்குப் பின்னால் மாணவிகளுக்கு பயிற்சியளித்து வழிகாட்டிய பொறுப்பாசிரியர்கள் வி.எஸ்.ஜெபரட்ணம், கே.தயானாத்,
திருமதி.ஸ்ரீதேவி சுதர்ஷன், திருமதி கோகிலப்பிரியா, யோகேஸ்வரன், லக்ஷானி, ரவிக்குமார் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
வித்தியாலயத்தின் அதிபர் கே. யோகராஜா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மாணவிகளை வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.
– நடராஜா மலர்வேந்தன் –
