‘Kish விவேகன்ஸ் ப்றீமியர் லீக் 2024’ கிரிக்கட் தொடரின் சம்பியன் பட்டம் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் வசம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ‘Kish விவேகன்ஸ் ப்றீமியர் லீக் 2024’ கிரிக்கட் சம்பியன் கிண்ணத்தை தெமட்டகொடை நைட் ரைடர்ஸ்  27 ஓட்டங்களால் தம்மை எதிர்த்து போட்டியிட்டு எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

கொழும்பு முவர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அணிக்கு அறுவர் கொண்ட மென்பந்து கிரிக்கட் தொடரில் மொத்தமாக நான்கு குழுக்களின் கீழ் 21 அணிகள் கலந்துகொண்டன. குழுநிலைப் போட்டிகள், கால் இறுதி, அரை இறுதி, மாபெரும் இறுதிப் போட்டி என மொத்தமாக 52 போட்டிகள் நடைபெற்றன.

இறுதிப்போட்டியில் எம்.பிரதீப் தலைமையிலான எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியில் ஆர் பிரணவன், ஆர். ஜெசிந்தன், எஸ்.ஹரிஹரன், டி. விக்னேஸ், கே.சுலக்ஷன் ஆகியோரும் யூ. வாகீசன் தலைமையிலான தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணியில் ஆர். வேலுசாமி, கே.பிரசாந்தன், ஜே.கிரிஷான், எஸ்.டிலக்ஸன் வி.சஞ்ஜீவன் ஆகிய வீரர்களும் களமிறங்கினர்.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 67 ஒட்டங்களை பெற்றதுடன் ஆர். வேலுசாமி 25 ஓட்டங்களையும், வி.சஞ்ஜீவன் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக் கொடுத்ததுடன் எலக்கந்த ஜேடி போய்ஸ் சார்பாக பந்து வீச்சில் டி. விக்னேஸ் ஆறு ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்தினார்.

68 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியின்  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டி.விக்னேஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்கள் போட்டியை தம்வசப்படுத்த முனைந்தபோதிலும் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசி போட்டியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

துடுப்பாட்டத்தில் ஆர் பிரணவன் மாத்திரம் தனிநபராக போராடி ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 40 ஓட்டங்களை பெற்று 27 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் சார்பாக எஸ்.டிலக்ஸன், யூ. வாகீசன் ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் சிறந்த வீரராகவும் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணியின் ஆர். வேலுசாமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது எலக்கந்த ஜேடி போய்ஸ் அணியின் டி. விக்னேஸிற்கு வழங்கப்பட்டது. சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரட்ணம் செலஞ்சர்ஸ் அணியின் அஜித்துக்கு வழங்கப்பட்டது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ரட்ணம் செலஞ்சர்ஸ் போய்ஸ் மற்றும் வத்தளை சாணக்கியன் அணிகள் மோதியதுடன் அப்போட்டியில் ரட்ணம் செலஞ்சர்ஸ் போய்ஸ் அணி வெற்றிபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதம விருந்தினராக ஈஸ்வரன் பிரதர்ஸ் தலைவர் கணேஷன் தெய்வநாயகம் கலந்துகொண்டதுடன் தெமட்டகொடை நைட் ரைடர்ஸ் அணிக்கு சம்பியன் கிண்ணத்தையும் ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசையும் வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற எலக்கந்த ஜேடி போய்ஸ் அணிக்கு கிண்ணமும் 50 ஆயிரம் பணப் பரிசும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்களாக கிஷ் நிறுவனத்தின் அதிகாரிகள், கல்லூரியின் பழைய மாணவரும், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எஸ். ஸ்ரீ கஜன், மாஸ்டர் மெரைனர் கெப்டன் எஸ். மணிவண்ணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இதுதவிர  கல்லூரி அதிபர் மூ.மூவேந்தன், பழைய மாணவர் சங்க உப தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பேனா சுரேஸ் குமார்

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles