” மலையகத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் அரசியலை முன்னெடுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கே மலையக மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், திகாம்பரம், உதயகுமார் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” கடந்த நான்கரை வருடங்களில் மலையக மக்களுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி பல அபிவிருத்திகளை முன்னெடுத்ததுடன், உரிமைகளையும் வென்றெடுத்தது.பிரதேச சபை சட்டத்தில் திருத்தம், காணி உரிமை, வீட்டுரிமை, மலையக அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகளின் எண்ணிக்கை உயர்வு ஆகியன குறிப்பிட்டுக் கூறக்கூடிய விடயமாகும்.
அதேபோல் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவது பற்றி கலந்துரையாடப்பட்டது. அடுத்த ஆட்சியில் நிச்சயம் அதனை செய்வோம். எனவே, மலையக மக்கள் முற்போக்கு கூட்டணி நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கே வாக்களிக்கவேண்டும்.” – என்றும் அ லோரன்ஸ் கூறினார்.