ஏஐ காதலியை நம்பி சொத்தை விற்று ஏமாந்த நபர்!

பிரேசிலில், இணையம் வழியாக அறிமுகமான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தனது உடைமைகள் அனைத்தையும் விற்று, 1,200 மைல்களுக்கு மேல் பயணம் செய்த 49 வயதான நபர், தான் சந்திக்கச் சென்ற பெண் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மரன்யாவ் மாநிலத்தைச் சேர்ந்த எடிமார் ரோஷா மார்டின்ஸ் என்ற கட்டடத் தொழிலாளியே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, சமூக ஊடகத்தில் ஜெசிக்கா ஒலிவேரா என்ற பெயரில் பெண்ணொருவரின் கணக்கைக் கண்ட அவர், அந்தப் பெண் உண்மையானவர் என நம்பியுள்ளார். ஜெசிக்கா பசென்டெய்ரா (Jéssica Fazendeira) என்ற பெயரிலும் அறியப்பட்ட அந்தக் கணக்கில், பண்ணை வீட்டில் வசிக்கும் பெண்ணின் காணொளிகள் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த சமூக ஊடகக் கணக்கில் வெளியிடப்பட்ட காணொளிகளில், தன்னுடன் பண்ணையில் வசிக்கக்கூடிய வாழ்க்கைத் துணையைத் தேடுவதாக அந்தப் பெண் போன்ற கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. தன்னுடன் வாழ வருபவருக்கு வீடும் நிதி உதவியும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் காணொளிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உண்மையென நம்பிய மார்டின்ஸ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என எதிர்பார்த்துள்ளார்.

இதற்காக, கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி தனது உடைமைகளை விற்று, பேருந்தில் பயணம் செய்வதற்கான பணத்தைத் திரட்டியுள்ளார். பின்னர், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தின் தலைநகரான பெலோ ஹொரிசோன்டே நகரை நோக்கிப் பயணித்த அவர், ஒக்டோபர் 11ஆம் திகதி அங்கு சென்றடைந்துள்ளார்.

பெண் உண்மையானவர் அல்ல என்பது தெரியவந்தது
எனினும், நகரைச் சென்றடைந்த பின்னர் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் தவித்துள்ளார். பெண்ணின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பலரிடமும் விசாரித்தபோதும், அவரைப் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை.

இறுதியில், உள்ளூர் வானொலி நிலையமொன்றின் உதவியை நாடியபோது, அவர் தேடிச் சென்ற பெண் உண்மையான நபர் அல்ல என்பதும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதும் தெரியவந்துள்ளது.

அதற்குள் பயணத்திற்காகத் தனது உடைமைகளை விற்றிருந்ததால், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கும் அவரிடம் போதிய பணம் இருக்கவில்லை. இதையடுத்து, பெலோ ஹொரிசோன்டே நகர நிர்வாகத்திடம் உதவி கோரிய அவருக்கு, சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான உதவி வழங்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, குறித்த கணக்கை நிர்வகிக்கும் நபர் வெளியிட்ட காணொளியில், அந்தப் பெண் கதாபாத்திரம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்
கப்பட்டவர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், மார்டின்ஸுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவில்லை என்றும், அவரைச் சந்திக்க வருமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார். சமூக ஊடகக் கணக்கின் ஈடுபாட்டை அதிகரித்து, அதன் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்வதே அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்படும் போலியான அடையாளங்களையும் சமூக ஊடகக் கணக்குகளையும் உண்மையானவை என நம்புவதால் ஏற்படக்கூடிய உணர்வுபூர்வமான மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்து எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles