16 வயதுக்குட்பட்டோருக்கு தடை: அவுஸ்திரேலியாவில் 7.56 இலட்சம் Facebook, Instagram கணக்குகளை நீக்கிய Meta

Facebook மற்றும் Instagram நிறுவனங்களின் உரிமையாளரான Meta, 16 வயதிற்குட்பட்ட அவுஸ்திரேலியர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யும் உலகின் முதல் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, 750,000 இற்கும் அதிகமான சந்தேகத்திற்குரிய கணக்குகளை நீக்கியுள்ளதாக வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகளின் தலையீடு அதிகரிக்கக்கூடிய நிலையில், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை கடந்த டிசம்பரில் அமுலுக்கு வருவதற்கு சற்று முன்பிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில், 462,000 சந்தேகத்திற்குரிய Instagram கணக்குகளையும் 294,000 சந்தேகத்திற்குரிய Facebook கணக்குகளையும் செயலிழக்கச் செய்துள்ளதாக Meta தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் 331,000 Instagram கணக்குகள் மற்றும் 173,000 Facebook கணக்குகள் நீக்கப்பட்டதாக நிறுவனம் முன்னதாக தெரிவித்திருந்தது.

உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான Meta, தானும் ஏனைய தளங்களும் கடுமையாக எதிர்த்து வந்த இந்தச் சட்டத்திற்கு இணங்க விரும்புவதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, சட்டத்திற்கு இணங்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கூறப்படும் Meta வுக்குச் சொந்தமான சில தளங்கள் உட்பட பல சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக அமுலாக்க வழக்குத் தொடருவது குறித்து அவுஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பு பரிசீலித்து வருகிறது.

Meta குறிப்பிட்ட காலப்பகுதியுடன் பொருந்தும் இணக்கத் தரவுகளை வேறு எந்த சமூக ஊடகத் தளமும் வெளியிடவில்லை. இருப்பினும், அவுஸ்திரேலிய அரசின் புள்ளிவிவரங்களும் பல சுயாதீன ஆய்வுகளும், தடை அமுலுக்கு வந்த முதல் மூன்று மாதங்களிலும் 16 வயதிற்குட்பட்ட 10 பேரில் 8 பேருக்கும் அதிகமானோர் சமூக ஊடகங்களை தொடர்ந்து பயன்படுத்தியதாகக் காட்டுகின்றன.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் உடல் மற்றும் மனநலத்தில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அரசு இந்த முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தை முன்மொழிந்தது. இந்தச் சட்டம் டிசம்பர் 10 அன்று அமுலுக்கு வந்தது.

உலகின் பல நாடுகளும் இதேபோன்ற வயது வரம்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், இந்தத் தடையை தோல்வியடையச் செய்வதற்காக சமூக ஊடகத் தளங்கள் திட்டமிட்டு செயற்படுவதாக அவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலராக (69.75 மில்லியன் அமெரிக்க டொலர்) இரட்டிப்பாக்கவும், ஒழுங்குமுறை அமைப்புக்கு ஆவணங்களைப் பெறுவதற்கான விரிவான அதிகாரங்களை வழங்கவும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற விசாரணை

Meta, TikTok, YouTube-இன் உரிமையாளரான Google மற்றும் Snap நிறுவனத்தின் Snapchat ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்த மாற்றங்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசாரணையில் சாட்சியமளிக்கவுள்ளனர். ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் இதில் சாட்சியமளிக்க உள்ளனர்.

“அமுலாக்க நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும்,” என Meta வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இளைஞர்களுக்கு பாதுகாப்பானதும், அவர்களின் வயதுக்கு ஏற்றதுமான இணைய அனுபவத்தை உறுதிசெய்ய வேண்டும் என்ற அவுஸ்திரேலிய அரசின் இலக்கை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். சட்டத்தின் கீழ் எங்களுக்குள்ள கடமைகளையும் நிறைவேற்றி வருகிறோம்,” என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட வயது உறுதிப்படுத்தல் தொழில்நுட்பச் சோதனையில், சந்தையில் உள்ள தொழில்நுட்பங்கள் இத்தகைய தடையை திறம்பட நடைமுறைப்படுத்த உதவக்கூடும் என்று கண்டறியப்பட்டது.

Meta-வின் தளங்கள் உட்பட பெரும்பாலான பெரிய சமூக ஊடக தளங்கள், புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு வயதை மதிப்பிடும் மென்பொருள்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், பொதுவாக முதலில் பயனர்களின் இணையச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வயதை ஊகிக்கும் முறையைப் பயன்படுத்துவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கணக்கு 16 வயதிற்குட்பட்ட ஒருவருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டும் “சூழல் சார்ந்த குறிப்புகளை” கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக Meta தெரிவித்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அல்லது பாடசாலை வகுப்புகள் தொடர்பான குறிப்புகள் போன்றவை இதில் அடங்கும். மேலும், வயது வரம்பிற்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் கணக்குகள் தொடர்பான புகார்களையும் AI மூலம் ஆய்வு செய்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒருவரின் முந்தைய கணக்கு நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் மீண்டும் புதிய கணக்குகளை உருவாக்க முயற்சிக்கும் வாய்ப்பையும் தற்போது நீக்கியுள்ளதாக Meta மேலும் தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles