பால் சேகரிப்பதற்காக பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து , தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து இன்று (14) விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மத்திய பிரிவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் , குறுகிய வளைவு ஒன்றைக் கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்திலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் டிப்பர் கடுமையாக சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.










