கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை வரலாற்றில் பல்வேறு காலப்பகுதிகளில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பல அணிகள் விறுவிறுப்புடன் மோதின. இறுதிப் போட்டிக்கு 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு பழைய மாணவர் அணிகள் தகுதி பெற்றன.
:
முதலிடம்: 2018ஆம் ஆண்டு பழைய மாணவர் அணி (வெற்றி கேடயத்தை சுவீகரித்தனர்).
இரண்டாமிடம்: 2017ஆம் ஆண்டு பழைய மாணவர் அணி.
வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் வழங்கி வைத்தார். பழைய மாணவர்களிடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்த இந்த நிகழ்வு, அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.










