‘ஐ.தே.கவை விட்டு சென்றவர்கள் மீண்டும் வருவார்கள்’

ஐக்கிய தேசிய கட்சி நூற்றாண்டு கடந்தும் நிலைத்து நிற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் 100 ஆண்டுகள் நாட்டில் இருக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது நற்பெயரை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைளை எடுக்கும். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகளுக்கு சென்றவர்கள் சம்பந்தமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மிகவும் துரதிஷ்டவசமான கட்சி. அந்த கட்சிக்கு சென்ற பலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொள்வார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles