சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar) அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-வது சுற்றில், நோர்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போட்டி முடிவடைந்ததும் கனத்த இதயத்துடன், கண்ணீர்மல்க கருத்து வெளியிட்ட 34 வயதான நெய்மர்,
” நியூ ஜெர்சியின் இதே மெட்லைப் (MetLife) மைதானத்தில்தான் எனது சர்வதேச கால்பந்து பயணம் தொடங்கியது, இப்போது இங்கேயே அது முடிவுக்கு வந்துள்ளது. எல்லாம் முடிந்துவிட்டது.”என உருக்கமாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி, இதே நியூ ஜெர்சி மைதானத்தில் அமெரிக்காவிற்கு எதிரான நட்புரீதியான போட்டியில் களமிறங்கி தனது சர்வதேச பயணத்தைத் தொடங்கிய நெய்மர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மைதானத்தில் தனது கடைசிப் போட்டியையும் விளையாடி முடித்துள்ளார்.
பிரேசில் அணியின் உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் பெலேயை விட அதிக கோல்களை அடித்து, பிரேசிலின் ‘ஆல்-டைம் டாப் ஸ்கோரர்’ (All-time top scorer) என்ற சாதனையை நெய்மர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர் எதிரான இப்போட்டியில் மாற்று வீரராகக் களம் புகுந்த நெய்மர், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் பிரேசிலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
எனினும் ஆட்டத்தின் இறுதி விசிலுக்குப் பிறகு பிரேசில் தோற்று வெளியேறியதால், மைதானத்திலேயே அமர்ந்து அழுதுகொண்டிருந்த நெய்மரை சக வீரர்கள் தேற்றினர்.
வலது கெண்டைக்காலில் ஏற்பட்ட தொடர் காயம் காரணமாக, இந்த உலகக் கோப்பை தொடரில் பிரேசில் விளையாடிய போட்டிகளில் நெய்மரால் இரண்டு போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடிந்தது.
குரூப் சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அவர் விளையாடியிருந்தார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரேசில் அணியின் தூணாக விளங்கிய நெய்மரின் ஓய்வு, அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
