O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 வரை ஏற்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அதுதொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டுள்ளதுடன் விபரங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles