க.பொத. சாதாரணதரப்பரீட்சையின்போ
மே 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரணதரப்பரீட்சை நடைபெறும் எனவும், 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“சாதாரண தரப்பரீட்சையை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுவருகின்றன. பரீட்சை தாள்கள் அச்சிடுதல், பரீட்சை நிலையங்களுக்கான ஆளணி நியமனம், அவர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
பாடசாலைகளில் இருந்து 3 லட்சத்து 87 ஆயிரத்து 648 விண்ணப்பங்களும், தனியாரிடமிருந்து 65 ஆயிரத்து 331 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 3 ஆயிரத்து 521 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.
வடக்கில் தீவு பகுதி உட்பட சில விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும். கைதிகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் பரீட்சை நிலையமொன்றும், மஹரகம வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்காக அங்கு பரீட்சை நிலையமொன்றும், தங்காலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் இயங்கும்.
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெற்றதும் அதை உரிய வகையில் சரிபார்த்துக்கொள்ளவும், பெயர், பாட எண்ணிக்கை, மொழிமூலம் உள்ளிட்ட விடயங்களை கண்காணிக்கவும். தவறு இருப்பின் முன்கூட்டியே உரிய தரப்புக்கு தெரியப்படுத்தி சீர்செய்து கொள்ளவும். அதேபோல பாடசாலைகளில் கடைசிநேரம்வரை காத்திருக்காமல் மாணவர்களுக்கு அனுமதி அட்டையை வழங்கி, தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும். அதன்பின்னர் வேண்டுமானால் பாடசாலை சம்பிரதாயங்களுக்கு அமைய வழங்கலாம்.
அதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணம் உள்ளிட்ட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள உபகரங்கள் கொண்டுவரப்படும் விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, இம்முறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பரீட்சை எழுத தடைவிதிக்கும் இந்த நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது. பரீட்சைக்கு உரிய வகையில் தயாராகுங்கள்.” – என்றார் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.