பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு, சட்டத்தை மீறியுள்ள குற்றச்சாட்டின்பேரில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம், பொலிஸார் வாக்குமூலம் பெற தயாராகிவருகின்றனர்.
இது தொடர்பில் மனோக கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வருமாறு,
“#P2P – பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டு “சட்டத்தை மீறினேன்” என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ் (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது.
“வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளேன்.” – என்றுள்ளது.
