Home Blog Page 127

கல்வி மறுசீரமைப்பை கைவிடு: போராட்டத்தில் குதித்தார் விமல்!

இலங்கை அரசியலில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பேர்போன விமல்வீரவன்ச, இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்னால் கட்சி சகாக்களுடன் திரண்டு வந்து அவர் போராட்டத்தில் குதித்துள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே இப்போராட்டம் இடம்பெறுகின்றது.

புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விமலும், அவரின் சகாக்களும் தெரிவித்துள்ளனர்.

கல்வி மறுசீரமைப்பை உடன் கைவிடு, கோ ஹோம் ஹரிணி என்று கோஷங்கள் எழுப்படுகின்றன.

துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குகிறது ஆஸ்திரேலியா: அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்!

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மீண்டும் கூடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி கூடும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில், சிட்னி போண்டி கடற்கரையில் யூத சமூகத்தை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து வெறுப்பு பேச்சு மற்றும் துப்பாக்கி சீர்திருத்தம் என்பன பற்றி சட்டங்களை இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு எதிரணிகள் வலியுறுத்தின.

இந்நிலையிலேயே மேற்படி திகதிகளில் நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை ஆகிய இரு அவைகளும் கூடும் என ஆஸ்திரேலிய பிரதமர் இன்று அறிவித்தார்.

போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.

மரக்கறி விலைப்பட்டியல் (12.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (12.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஈரானில் போராட்டம்: 500 பேர்வரை உயிரிழப்பு!

ஈரான் போராட்டத்தில் இதுவரை 500 பேர்வரை உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது.

டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

போராட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா பர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்

.அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.

வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10,600 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் களமிறங்குகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகின்றார்.

கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார்.

இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் தொடர்பில் மேற்படி சந்திப்புகளின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக அண்மையில் இலங்கை வந்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய இந்தியாவின் சலுகைக் கடன் மற்றும் நன்கொடை திட்டம் பற்றி அவர் அறிவிப்பு விடுத்தார்.

எனவே, இலங்கை மீண்டெழுவதற்கு சீனாவின் உதவி பற்றியும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பார் என தெரியவருகின்றது.

அதேவேளை, சீன அமைச்சரின் கொழும்பு வருகை தொடர்பில் டெல்லி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.

 

“மலையக அரசியல் அரங்கம்” அரசியல் கட்சியாக அங்கீகாரம்

“மலையக அரசியல் அரங்கம்”
அரசியல் கட்சியாக அங்கீகாரம்

கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கி வந்த மலையக அரசியல் அரங்கம் இலங்கை தேர்தல்கள் ஆணையகத்தால் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அதன் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையக அரசியல் அரங்கத்தின் ஊடகச் சந்திப்பு நேற்று ஹட்டனில் இடம்பெற்றது.

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை வளர்த்தல், ஆண்களுக்கு சமாந்திரமாக பெண்களுக்கும் சம வாய்ப்பு அளித்தல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியல், அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாலமாக செயற்படுதல் எனும் பிரதான இலக்குகளைக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக சமூக அரசியல் தளத்தில் இயங்கிவந்த மலையக அர்சியல் அரங்கம் 2026 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன் ‘சிறகு’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் உரிமை சார்ந்த அரசியல் முனவைப்புக்கான தேவை எப்போதும் இருந்து வருகின்றது. 2026 ஆண்டு அரங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக நிர்வாக ‘மலையக பக்கங்களின் உரிமைக் கோரிக்கை: நிலமும் நிர்வாகமும்’ எனும் தொனிப்பொருளில் மலையக மாவட்டங்கள் தோறும் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்துவதற்கும் 2026 ஆண்டு இறுதியில் மலையக மக்களின் டித்வா புயல் அனர்த்தத்தின் பின்னான மதிப்பீட்டறிக்கையையும் தயார் செய்து
‘மலையகத் தீர்மானம்’ ஒன்றை நிறைவேற்றி இலங்கை அரசுக்கும் சர்வதேச அரங்குக்கும் கொண்டு செல்வதற்கும் தீர்மானித்துள்ளோம்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையிலா அல்லது விகிதாசார முறையிலா எந்த முறைமையில் நடைபெறும் என இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசு அதற்காகக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

இப்போதைய மாகாண சபையில் மலையக மக்களுக்கு உரிமைகள் ஏதும் குறித்து வைக்கப்படவில்லை. அத்தகைய அதிகாரங்கள் எவ்வாறானதாக அமைதல் வேண்டும் எனும் அடிப்படையில் உடன்பாடுடைய அமைப்புகளுடன் கூட்டணியாக இணைந்து போட்டியிடவும் தயாராகவுள்ளோம்.” – என்றார்.

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ட்ரம்ப்!

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

“ஈரான் சுதந்திரத்தை எதிர்பார்க்கிறது. முன்னெப்போதும் இல்லாதவகையில், அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது”எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்ததால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், கடந்த ஆண்டு டிசம்பா் இறுதியில் இருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், கடந்த 1979-ஆம் ஆண்டு அந்நாட்டில் இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது முதல், ஈரானில் மதகுருக்கள் ஆட்சி செய்து வரும் மரபை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.

இதனிடையே, ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் அங்குள்ள நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று நாடு கடந்து வசிக்கும் அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது: கல்வி அமைச்சும் ஹரிணி வசமே இருக்கும்!

“பிரதமர் பதவியில் இருந்து கலாநிதி ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் எழவில்லை. அப்பதவியில் அவர் தொடர்வார். அத்துடன், அவரிடமிருந்து கல்வி அமைச்சும் பறிக்கப்படமாட்டாது.”

இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரதமர் பதவியில் மாற்றம் வருமா, அவரிடமிருந்து கல்வி அமைச்சு பறிக்கப்படுமா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜித ஹேரத்,

“ கல்வி மறுசீரமைப்பென்பது பரந்தப்பட்ட விடயமாகும். இதில் ஒரு அலகில்தான் வழு இடம்பெற்றுள்ளது. அது பற்றி விசாரணை நடத்தப்படுகின்றது.

எனினும், குறுகிய நோக்கில் இது விடயம் சம்பந்தமாக அரசியல் நடத்தப்படுகின்றது.

பிரதமர் பதவியில் மாற்றம் வராது. நாம் கூட்டு பொறுப்புடன் செயல்படுகின்றோம். கல்வி அமைச்சிலும் அவரே தொடர்வார்.
கல்வி மறுசீரமைப்பென்பது சவால்மிக்க பணியாகும். அதனை நாம் செயவோம். மக்கள் ஆணை அதற்கு உள்ளது.”எனவும் குறிப்பிட்டார்

கல்வி அமைச்சு முன் காலவரையற்ற போராட்டத்தில் குதிக்கிறார் விமல் வீரவன்ச

புதிய கல்வி சீர்திருத்தங்களை கைவிடக் கோரியும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரியவை பதவி விலகக் கோரியும், காலவரையற்ற போராட்டத்தை நடத்தவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“குழந்தைகளுக்காக பெரியவர்கள் நிற்கிறார்கள்” என்ற குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நாளை காலை 9 மணிக்கு கல்வி அமைச்சுக்கு முன்பாக, தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட விமல் வீரவன்ச,

அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், நாடு முழுவதும் உள்ள பெற்றோர் தொடர்ச்சியான இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்கள் குழந்தைகளுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும், அதற்கு பதிலாக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் அறிமுகப்படுவதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சீர்திருத்தங்கள், போதுமான ஆலோசனை இல்லாமல் அவசரமாக செயற்படுத்தப்படுவதாகவும், கல்வியை மேம்படுத்துவதற்கான உண்மையான முயற்சிக்கு பதிலாக ஒரு வணிக முயற்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி பாடத்தொகுதிகளில் இணையத்தள இணைப்புகள் மற்றும் வலையொளித் தளங்களைச் சேர்ப்பதன் மூலம், இதுபோன்ற தளங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை அனுப்புவது குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் என்றும், இதனால் யார் நிதி ரீதியாக பயனடைகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை அரசாங்கம் மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (11.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

அமைச்சரின் ராஜினாமா நாடகக்கூத்து!

0
“நிலக்கரி ஊழலை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் சகல முயற்சிகளையும் தோற்கடிக்க ஒன்றிணைவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, “...

” 22 ஆம் திகதிக்குள் இணங்க மறுத்தால் மீண்டும் குண்டுபோட நேரிடும்”

0
ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற...

சி.எஸ்.கேயின் வெற்றி வேட்டை தொடருமா?

0
ஐ.பி.எல்.தொடரில் இன்று நடைபெறும் 27 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (18) மோதுகின்றன. இப்போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும். சன்ரைசர்ஸ்...