Home Blog

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப் போர்க்கொடி!

பாலஸ்தீனத்தை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் தமது சமூக ஊடக தளமான ட்ரூத்தில் ,
‘ பலஸ்தீனத்தின் தனிநாடு அந்தஸ்தை ஆதரிப்பதாக கனடா அறிவித்துள்ளது. அது அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை எங்களுக்கு மிகவும் கடினமாக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யாத நாடுகள் மீது நேற்று முதல் அதிக வரிகள் விதிக்கப்படவிருக்கிறது.

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த கனடாவும் அமெரிக்காவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இப்பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் அமெரிக்க−-மெக்சிகோ- − கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வராத அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

” புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

‘ வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை குற்றவாளியாகப் பார்க்கின்றது. முன்னாள் கடற்படை தளபதி சிறையில் உள்ளார்.

புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகியுள்ளனர்.” எனவும் நாமல் விசனம் வெளியிட்டார்.

புலிகளால் செய்ய முடியாமல்போன கலாசார சீரழிவை தற்போதைய அரசாங்கம் செய்கின்றது. அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்று பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர்.” – என நாமல் மேலும் குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

மஹிந்தவை முடக்க சதி! மொட்டு கட்சி கொதிப்பு!!

 

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விமர்சித்துள்ளது.

‘ மஹிந்த ராஜபக்சவை கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே இதன் பின்னணியில் உள்ளது.” – என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டு மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கையில், அவற்றுக்கு தீர்வுகளை தேடாமல், முன்னாள் ஜனாதிபதிகள்மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும் நடைமுறை உலக நாடுகளில் உள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கில் இங்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை இலக்கு வைத்து அல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில், அவரை கொழும்பில் இருந்து அகற்றி மெதமுலனவுக்குள் முடக்கும் முயற்சியே இது இடம்பெறுகின்றது.

எனவே, மஹிந்தவை கொழும்பில் இருந்து வெளியேற்றும் சட்டமூலம் என இதற்கு பெயர் வைப்பதே பொருத்தமானதாக அமையும்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழும். எனவே, ஜனாதிபதி அநுர உட்பட இனி வரும் ஜனாதிபதிகளுக்குதான் அது ஏற்புடையதாக அமையும். அவ்வாறு இல்லையேல் சர்வஜன வாக்கெடுப்பு உட்பட அரசியலமைப்பு மாற்றம் ஊடாகவே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவேண்டும்.” – எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டார்.

ரஷ்யாவுடன் வலுவான உறவு தொடரும்: இந்தியா திட்டவட்டம்!

இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது என்று இந்தியா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்நிலையிலேயே இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘‘இந்தியா – ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது. இதேபோல இந்தியா – அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, வரி விதிப்பால் அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் சராசரி குடும்பத்தினரின் வீட்டு செலவு ஆண்டுக்கு 2,400 டாலர்வரை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 122 எலும்புக்கூடுகள் அடையாளம்!

 

– இன்று புதிதாக 4 அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 7 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 27 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 36 நாட்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதுவரையில் 122 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 112 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் வறுமை ஒழிப்பு சமர் முன்னெடுப்பு!

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு இன்று 01.08.2025 விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், , பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” தென்னை பயிர்செய்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் ஏக்கர் காணியில் தென்னை பயிர்செய்கை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காணிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றது. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவே இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வறுமை ஒழிப்பு என்பது எமது கொள்கைகளின் பிரதான விடயமாகும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் அதிகளவு வறுமை உள்ளது. இந்நிலைமையில் இருந்து மீள வேண்டும். போரால் அனைத்தையும் இழந்துள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வாழ்க்கையில் மாற்றம் இல்லை. வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது.

தென்னை பயிர்செய்கையை சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் செழிப்பான பொருளாதாரம் இப்பகுதியில் மலரக்கூடும்.” – என்றார்.

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம்

தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியமானது என்பதுடன், ஸ்கானிங் இயந்திரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியோடு அப்பகுதியில் முழுமையான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானப்பகுதியில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், இன்றையதினம் குறித்த பகுதியை நேரிற்சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

1995 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையும் முழுக்க முழுக்க இராணுவ முகாமாகவும், இராணுவக் கட்டுப்பாட்டு வலயமாகவும் கையகப்படுத்தப்பட்டிருந்த செம்மணிப் பகுதியில் இனங்காணப்படும் மனித என்புத் தொகுதிகள் சாதாரணமாக புதைக்கப்பட்டவை தான் என்று கூற முற்படுவது மிக அபத்தமானது.

இந்துக்களின் சடங்குமுறையில் உடலங்களை கூட்டாக அடக்கம் செய்வதோ, ஆடைகளற்று அடக்கம் செய்வதோ பின்பற்றப்படுவதில்லை. அவ்வாறிருக்க ஒரு இனத்தின் பலதசாப்தகாலப் போராட்டத்துக்கான சாட்சியமாக அணுகத்தக்க முக்கியத்துவம் மிக்க விடயமொன்றை மடைமாற்றும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

அத்தகைய அரச ஒத்தோடிகளின் செயற்பாடுகளைக் கடந்து, செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் முழுமையாக நடைபெற்று உண்மைகள் கண்டறியப்படுவதற்காக, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வோம் – என்றார்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

0
  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு...

பாலஸ்தீனம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப் போர்க்கொடி!

0
பாலஸ்தீனத்தை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

0
" புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...