Home Blog Page 3646

வலப்பனை பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

நுவரெலியா – வலப்பனை பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 2.59 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.0 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறித்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

சிம்பு, நயன்தாராவை மீண்டும் சங்கமிக்க வைக்க முயற்சி

நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாராவை இணைத்து வைக்க பிரபல இயக்குனர் ஒருவர் முயற்சி செய்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ’விண்ணை தாண்டி வருவாயா’ என்ற சூப்பர்ஹிட் படம் உருவாகியது. அதன் பின் 2016ஆம் ஆண்டு இதே கூட்டணியில் ‘அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்க கவுதம் மேனன் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கவுதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ’வல்லவன்’ மற்றும் ’இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் இதற்கு முன்பு நடித்திருக்கிறார்கள்.

‘பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு’ – பொங்கியெழ தயாராகிறார் வடிவேல் சுரேஷ்

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார்.

அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ளன.கடந்த நல்லாட்சியின்போதும் சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டது. அந்த சாபத்தால்தான் ஐக்கிய தேசியக்கட்சி இன்று அழிந்துள்ளது. தலைவர், செயலாளர் என எவரும் பாராளுமன்றத்தில் இல்லை.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என நாட்டில் ஜனாதிபதி அறிவிப்பு விடுத்தார். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஆயிரம் ரூபா குறித்த யோசனையை முன்மொழிந்தார்.

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும். எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மட்டும் எதற்கு கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசாங்கம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.  கம்பனிகளுக்கு தேயிலை சபை மற்றும் திறைசேரி ஊடாக நிவாரணங்களை வழங்கலாம்.

அடிப்படை சம்பளத்தை 25 ரூபாவால் உயர்த்துவதே கம்பனிகளின் கோரிக்கை. இதனை ஏற்கமுடியாது. ஆயிரம் ரூபா அவசியம். சம்பள நிர்ணயசபை 6 ஆம் திகதி கூடவுள்ளது. அதன்மூலம் ஆயிரம் ரூபா பெறுவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். ஏனைய தொழிற்சங்கங்களும் வழங்கும் என நம்புகின்றோம்.
பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள் சம்பள உயர்வு கிடைக்கவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டம் வேறுமாதிரியாக அமையும். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.” – என்றார்.

க.கிசாந்தன்

‘தொழிலாளர் தேசிய முன்னணியை நானே உருவாக்கினேன்’ – திலகர்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். இதில் குறிப்பாக சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதனை இரு பிரேரணைகள் வலியுறுத்தின.

அந்த கோரிக்கை தற்போது வெற்றியளித்துள்ளது. இதன்காரணமாகவே கால்நூற்றாண்டுகாலமாக பாராமுகம்காட்டிய அரசாங்கம், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் தலையிட்டுள்ளது.

சம்பள விவகாரத்தில் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்குவருவதில் தொடர்ச்சியாக தோல்விகளே ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே கட்டளையிட்டிருந்தார். அந்த கட்டளைகூட நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு தடையாக கூட்டு ஒப்பந்த முறைமையே இருக்கின்றது.

எனவேதான் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற யோசனையையும் பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். தென்பகுதி மக்களைப்போல மலையக மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சகல வழிகளிலும் சாத்தியமான தீர்வாக அமையும் என நம்புகின்றேன்.

அதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து நான் ஒதுங்கியுள்ளேன். ஆனாலும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரா நானே செயற்படுகின்றேன். யாப்பை எழுதி, அதனை பதிவு செய்து, உருவாக்கிய ஸ்தாபக பொதுச்செயலாளரும் நானே.

தேர்தலொன்று அறிவிக்கப்பட்டு, அதில் தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து போட்டியிடும் பட்சத்தில், அப்போது அரசியல் பிரிவு குறித்து தீர்மானம் எடுக்கப்படும். தேர்தலொன்று அறிவிக்கப்படாத காலக்கட்டத்தில் அது பற்றி கதைப்பது பயனில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

கிழக்கு முனையத்தை பாதுகாக்க ஜே.வி.பி. களத்தில் – நாளை போராட்டம்!

” கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டமும் முன்னெடுக்கப்படும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதென்பது கொழும்பு துறைமுகத்தையே விற்பனை செய்வதற்கு ஒப்பான செயலாகும். முதலீடு, குத்தகை என்ற போர்வையில் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு தாரை வார்ப்பதற்கே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.

நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் 5 வருடங்களே இந்த அரசுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் தாங்கள்தான் நாட்டில் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் ஆட்சியாளர்கள் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கும், பல்தேசியக் கம்பனிகளுக்கும் விற்பனை செய்துவருகின்றனர்.

இதற்கு இடமளிக்ககூடாது. தேசிய வளங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை தோற்கடிக்க வேண்டும். குறிப்பாக கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும். நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு பிரஜைகளும் இதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.” – என்றார்.

1000 ரூபா கிடைக்குமா? சம்பள நிர்ணயசபை 6 ஆம் திகதி கூடுகிறது!

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் முதல் பேச்சுவார்த்தை பெப்ரவரி மாதம் (06) ஆம் திகதி காலை நடைபெறவுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

அத்துடன் பெருந்தோட்ட துறை கம்பனிகளின் அடக்கு முறைகள் மற்றும் அதிகாரப் போக்குகளை கண்டிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பெருந்தோட்ட கம்பனிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட சக்தியுடன், தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கவும் இ.தொ கா தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெகு விரைவில் இதற்கான அழைப்பை விடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர்மட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ள நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்

இதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் முதல் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் (06) ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் (29) ஆம் திகதி கொழும்பில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள விடயம் உள்ளிட்ட, தொழிலாளர்களின் பொது நலன் உரிமை தொடர்பில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் அதில் கம்பனிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முடிவுகள் பல ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அதன்படி தொழிலாளர்கள் தற்போது பறிக்கும் கொழுத்துக்கு மேலதிகமாக 02 கிலோ அதிகரிக்க வேண்டுமெனவும்,

அடுத்து வரும் கூட்டு ஒப்பந்த காலத்தை 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யவும் கம்பனிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதை ஒருகாலமும் இ.தொ கா ஏற்றுக்கொள்ளாதென தெவித்த இராஜாங்க அமைச்சர், அதேநேரத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களை மேலும் அடக்கு முறைகளுக்கு ஆளாக்க யோசனைகளை முன்வைப்பதை ஏற்க முடியாதென்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாட்டில் இன்று மாத்திரம் 848 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 442 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் இதுவரை 848 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இவர்களில் 56 ஆயிரத்து 277 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 59 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் இன்று 32, 539 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது!

இலங்கையில் இன்று 32 ஆயிரத்து 539 சுகாதார பணியாளர்களுக்கு  கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 32 ஆயிரத்து 539 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதன்படி இரு நாட்களில் 37 ஆயிரத்து 825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுவிப்பு – மார்ச் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு

பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர், ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
அரசியல் பிரமுகர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட அவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
இதன்போதே அவர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸி வீரரின் மகளுக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய கோஹ்லி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, விராட் கோஹ்லி தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் நாடு திரும்பியது. நாடு திரும்பிய வீரர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதற்கிடையே தனது மனைவியின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிய விராட் கோஹ்லி, வார்னரின் மகளுக்கு தனது ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

கோஹ்லி கையெழுத்திட்ட அந்த ஜெர்சியுடன், சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறாள் வார்னரின் மகள் இண்டி. இந்த புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், இந்திய கேப்டன் விராட் கோஹ்லி எனது மகளுக்கு கொடுத்த மறக்க முடியாத பரிசை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். என் மகள் இண்டி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். கோஹ்லி, உங்கள் ஜெர்சியை கொடுத்தமைக்கு நன்றி. அந்த ஜெர்சி இண்டிக்கு மிகவும் பிடித்துள்ளது. என்னையும் ஆரோன் பிஞ்சையும் தவிர கோஹ்லியும் என் மகளுக்கு மிகவும் பிடித்தமானவர்.” என வார்னர் தெரிவித்துள்ளார்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

இந்திய தூதுவர், சஜித் சந்திப்பு!

0
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள ‘இந்திய இல்லத்தில்’ நேற்று  (12) மாலை இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள்...

200 MM மழை வீழ்ச்சி!

0
மேல், சபரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று 200 மி.மீ. இற்கும் அதிகமான மிகக் கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.