Home Blog Page 3644

குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்தது கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா ஜோடி

விராட் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்த நிலையில், அக்குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.

அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.

இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் வாமிகா’’ எனவும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்; கருஜயசூரியவுடன் ரிஷாட் அணி சந்திப்பு

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவமயமாக்கல் போன்ற இன்னோரன்ன பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

64,505 பேருக்கு கொரோனா – 58,075 பேர் குணமடைவு

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 60 ஆயிரத்து 522 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

58 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ளனர்.

‘தேசிய கொடியில் மாற்றமில்லை – சிங்கத்தின் உருவம் குறித்து பரீசிலனை’

வழமை போன்று இம்முறையும் முன்னர் பயன்படுத்தப்பட்ட தேசிய கொடியை சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற கமல் குணரட்ன தெரிவித்தார்.

கடந்த காலம் முதல் தேசிய கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த குறைபாடுகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தற்பொழுது நாம் தேசிய கொடி ஒன்றை பயன்படுத்துகின்றோம். சமுகத்தில் பல்வேறு தரப்பினர் இதில் உள்ள குறைபாடுகள் குறித்து சுட்டிக்காட்டினர்.

தேசிய கொடியில் சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தி வடிவமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரினதும் ஆலோசனைகளை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். இதுதொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

இதுதொடர்பில், பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இறுதி நடவடிக்கையாக இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இதனால் இம்முறை தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்தும் பொழுது இதிலும் பார்;க்க மேலதிகமாக ஏதும் செய்வதற்கு இல்லை. இதனால் நாம் முன்னர் பயன்படுத்திய தேசிய கொடியை நாம் பயன்படுத்துவோம்.

தேசிய கொடியில் எந்த மாற்றமும் இல்லை. சிங்கத்தின் உருவத்தில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனை வடிவமைப்பாளர்களுடனும், அரசாங்க அதிகாரிகளுடனும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தேசிய கீதம் தொடர்பாக மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு செயலாளர் பதிலளிக்கையில், தேசிய கீதம் இசைக்கப்படுவது ஜனாதிபதி சுதந்திர தின வைபத்தில் கலந்துக்கொள்ளும் வேலையில் தேசிய கொடியை ஏற்றும் பொழுது தேசிய கீதம் இசைக்கப்படும். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இடம்பெறும்; என்றும் செயலாளர் தெரிவித்தார்.

தாயும், மகனும் கொலை! அம்பாறையில் கொடூரம்!!

அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை வீட்டில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு முனையம் குறித்து பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அந்நியர்களுக்கு வழங்கமாட்டோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும்,  பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிற்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுபாடு வழங்கப்படவோ மாட்டாது என  பிரதமர்  இதன்போது குறிப்பிட்டார். அது 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரோஹித் அபேகுணவர்தன  இது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை   ஜனாதிபதி மற்றும்  பிரதமரிடம் கையளித்ததை தொடர்ந்து அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச நிறுவனத்திற்கு முன்வைக்கும்போது குறித்த விடயங்களுக்கு அந்நிறுவனம் உடன்படாமையினால் கிழக்கு முனையத்தை 100 வீதம் துறைமுக அதிகாரசபையின் கீழ் செயற்படும் நிறுவனமாக்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் பிற்பகலில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்மானத்திற்கு கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் செயற்பாட்டை நாளை முதல் கைவிடுவதற்கும் தொழிற்சங்கத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்க தலைவர்கள் கோரியுள்ளனர்.

ஆனால் தனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றை தாம் தீர்த்துள்ள போதிலும், அது குறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என  பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும் எனவும்   பிரதமர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க, பிரதமரின் தொழிற்சங்க பணிப்பாளர் ஜெனரல் சுமித் விஜேசிங்க மற்றும் 23 துறைமுக தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘மலையகத்தில் இன்னும் வழமைக்கு திரும்பாத மாணவர்களின் வருகை’

மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும் மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 30 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் சமூகமளிக்கின்ற போதிலும், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர் இன்னும் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கின்றது.

சமூக இடைவெளியை பேணுவதற்காக ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக கல்வி நடவடிக்கை இடம்பெறுகின்ற நிலையிலும், 100 சதவீத வருகை இன்னும் உறுதியாகவில்லை.

குறிப்பாக அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன் ஶ்ரீபாத சிங்கள பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் இன்று (01.02.2021) ஆறு மாணவர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே வருகை நன்றாகவே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

க.கிசாந்தன்

இந்தியாவின் தடுப்பூசி தேவை, இந்திய முதலீட்டாளர்கள் தேவையில்லையா – ராதா கேள்வி

இந்தியா இலவசமாக வழங்குகின்ற கொரோனா தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய முதலீட்டாளர்களை இலங்கையின் அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றவர்கள் ஏன் அங்கிருந்து வந்த கொரோனா தடுப்பூசியை திருப்பி அனுப்பவில்லை? ஏனென்னறால் அது உயிரை பாதுகாக்கின்ற காலத்தின் தேவையாக இருக்கின்றது.தேவைக்கு பயன்படுத்தி தூக்கி எறிகின்ற என்னத்திலேயே இன்று பல கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்தான் தேசப்பற்றாளர்கள்.

இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு எதிராக கோமிடுவது எமது பொருளாதாரத்திற்கு அடிக்கப்படும் சாவுமனியாகும்.ஏனெனில் எதிர்காலத்தில் இன்னும் பல இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருக்கின்ற இந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவர்கள் எப்படி முதலீடுகளை இலங்கையில் செய்வார்கள்?

எங்களுடைய பொருhளதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.தனியே நாங்கள் மாத்திரம் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.மேலும் இந்தியா என்பது எங்களுடைய அயல்நாடு.அவர்களுடன் எங்களுக்கு கடந்த பல தசாப்தங்களாக நெருங்கிய உறவு அனைத்து வழிகளிலும் இருக்கின்றது.

நாங்கள் எல்லாவற்றையும் சீனாவிற்கு மாத்திரம் வழங்குவதால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது.இந்தியா சீனா உட்பட ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

இன்று தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கின்றவர்கள் எந்தவிதமான கொள்கையும் இல்லாதவர்கள் என்பதை நாங்கள் கடந்த கால அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

எந்த நாடுகளுக்கு எதிராக கோசம் போடுகின்றார்களோ அந்த நாடுகளில் சென்று யாருக்கும் தெரியாமல் உல்லாசம் அனுபவித்து விட்டு வருகின்றவர்கள்தான் இந்த தேசப்பற்றாளர்கள்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இவர்கள் கூறியதை நினைத்து பார்த்தால் சிரப்புதான் வருகின்றது.

இன்று இந்த எதிர்ப்பு காரணமாக எங்களுடைய பொருளாதாரம் இன்னும் பின்னடைவை சந்திக்குமே தவிர் முன்னேற்றம் ஏற்படாது.அதனை அரசாங்கமும் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது.எனவே வீனாக எதிர்ப்பை காட்டுவதை விட்டுவிட்டு வருகின்ற முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுத்து எங்களுடைய நாட்டின் தனித் தன்மையை விட்டுக் கொடுக்காமல் செயற்படுவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இன்று எதிர்ப்பு கோசம் எழுப்புகின்ற பலரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டால் பாதிக்கப்படுகின்றவர்கள் அல்ல.அந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றவர்கள் பொது மக்களே.எனவே நாட்டு மக்களின் நன்மை கருதியே நாங்கள் செயற்பட வேண்டுமே தவிர.வெறுமனே எதிர்ப்பு கோசமிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது.” – என்றார்.

‘போராட்டத்தைக் காட்டிக்கொடுக்காதே’ – சிவநேசன்மீது இ.தொ.கா. இளைஞர் அணி சீற்றம்

” எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டமானது, தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காக அழுத்தம் தெரிவிப்பதற்கான வேலை நிறுத்த போராட்டமே தவிர, அரசியல் இலாபத்திற்கான போராட்டம் அல்ல என்பதை சிவநேசன் விளங்கிக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி சம்பள நிர்ணய சபை ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகையை ஆயிரம் ரூபாயாக நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற உள்ள நிலையில் அப்பேச்சி வார்த்தைக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையிலுமே வேலைநிறுத்த போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பாக எதிர் தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

விசேடமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சில உறுப்பினர்களே இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்களின் விமர்சனம் அரசியல் இலாபத்திற்காக வெளியிடப்படுகின்றது. தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் காட்டி கொடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் அறிக்கை வெளியிடுகின்றார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தொழிற்சங்கமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.மேலும் இரண்டு தொழிற்சங்கங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெறியேற வேண்டும் என கோசமிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியினலே.

அத்தோடு காலம் காலமாக கூட்டு  ஒப்பந்த பேச்சிவார்த்தை இடம்பெறும் போது முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக தமது அழுத்தத்தை மலையக பெருந்தோட்ட மக்கள் தெரிவித்தே வந்துள்ளனர்.பல்வேறு போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டே  சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளார்கள்.

வெறுமனே பேச்சிவார்ததை ஊடாக மாத்திரம் சம்பள அதிகரிப்பை பெற்றுவிட முடியாது, வெளியில் இருந்து வழங்கப்படும் ஆதவுகள்,அழுத்தங்கள் ஊடாகவே சம்பள பேச்சிவார்த்தையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.மாறாக அரசியல் வங்குரோத்து காரணமாக தொழிற்சங்கங்களை காட்டி கொடுப்பதால் சம்பள அதிகரிப்பை பெற்றிட முடியாது என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

தற்போது கூட்டு ஒப்பந்தமானது காலாவதியாகியுள்ள நிலையில் அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சி வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. அக்கூட்டு ஒப்பந்தத்தின் ஓர் சரத்தாகவே சம்பள அதிகரிப்பு பேச்சி வாரத்தை காணப்படுகின்றது.

எனவே முழுமையாக கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பது சிலரின் அறியாமையை வெளிப்படுத்துகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுமாறு கோசமிடுவதும் தொழிலாளர்களை அடகு வைக்க கோருவதை போன்றதாகும்.எனவே எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இடம்பெறவுள்ள அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி,சுயநல அரசியலுக்காக போராட்டத்தை காட்டிகொடுக்க முயற்சிக்க வேண்டாம் என  தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்த த.மு.கூ அப்போது அறிவித்த ஐம்பது ரூபாயை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது,அப்போது அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இருந்தால் அது எமக்கு படிப்பினையாக கூட இருந்திருக்கும்.

ஆனால் அப்படி செய்யவில்லை,ஐம்பது ரூபாய் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிய அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்கியது தொழிலாளர் தேசிய சங்கம். அவ்வாற் இருக்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்படும் தற்போதைய அரசாங்கத்தில் இருந்து இ.தொ.கா வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.

கிளங்கன் வைத்தியசாலையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

நுவரெலியாவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கும், சுகாதா பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி (01.02.2021) இன்று ஆரம்பமானது.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாடு முழுவதும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் ஊழியர்கள் ஆகியவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வைத்திய அதிகாரி வைத்தியர் தம்மிக்க அழகப்பெரும தலைமையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் இன்று (01.02.2021) காலை இடம்பெற்றன.

இதன் போது இங்கு பணிபரியும் சுமார் 150 இற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதே நேரம் குறித்த தடுப்பூசி பாதுகாப்பு துறையினர் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

சாரதிகளே அவதானம்!

0
சாரதிகளே அவதானம்! சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. நுவரெலியா பிரதான நகர், ஹாவாஎலிய, கந்தப்பளை, நானுஓயா, ரதல்ல மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் பனிமூட்டம்...

கடும் எதிர்ப்பால் விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!

0
ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “ ரிக்கி ராதன் பண்டிட்...